கைகேயி சூழ்வினைப் படலம் - 1635
தனெ்றல் வீசுதல்
1635.
இன மலர்க் குலம்வாய் விரித்து,
இள வாச மாருதம் வீச, முன்
புனை துகிற்கலை சோர, நெஞ்சு
புழுங்கினார் சில பூவைமார்;
மனம் அனுக்கம் விட, தனித்தனி, வள்ளலைப்
புணர் கள்ள வன்
கனவினுக்கு இடையூறு அடுக்க, மயங்கினார்
சில கன்னிமார்.
சில பூவைமார் - பெண்கள் சிலர்; இன மலர் குலம் வாய்
விரித்து- பல்வகையானபூக்களின் கூட்டங்கள் வாய்விட்டு மலர; வாச இள
மாருதம் வீச - நறுமணம் கலந்த இளங்காற்றுவீசுதலினால்; முன் புனை-
முன்னே தாம் அரையில் உடுத்தியிருந்த; துகில் கலைசோர - அடையும்
மேகலையும் குலைய; நெஞ்சு புழுங்கினார் - மனம் வருந்தினார்கள்; சில
கன்னிமார் - மணமாகா மகளிர் சிலர்; மனம் அணுக்கம் விட - நெஞ்சில்
உள்ள வருத்தம் தீர; தனித்தனி - தனித்தனியே (ஒவ்வொருவரும்);
வள்ளலைப்புணர்- இராமபிரானைச் சேர்வதாகக் கண்ட; கள்ளம் வன்
கனவுக்கு - மிக்க வஞ்சனையையுடையகனாவிற்கு; இடையூறு அடுக்க -
காற்றினால் தடை பொருந்துதலினால்; மயங்கினார் -திகைத்தனர்.
தென்றல் வீசுவதனால் காம விருப்பம் மிகக் கணவனைப் பிரிந்த
மாதர்கள் புழுங்கினர். திருமணமாகாதபெண் காற்றினால் தூக்கம் கலைந்து
கனவு நீங்க, உண்மையறிந்து மயங்கினர். விரித்து -விரிய; செய்தென்
எச்சம் செயவென் எச்சமாயிற்று; எச்சத்திரிபு. 56
