கேள்வி நேரம்
1. "நம் போர்க்கள வியூகத்தை உடனடியாக மாற்றியாகணும் தளபதி..."
"அப்படியானால் இந்தமுறை நான் முதலில் ஓடட்டுமா மன்னா...?"
2. "வயித்த வலிக்குதுபா...."
"வயித்துல ஒண்ணும் இல்லைனா அப்படித்தான் வலிக்கும்...."
"அப்ப, நேத்து நீ தலைவலினு சொன்னியே!"
3. "என் மனைவியைப் பார்த்து எந்தக் கேள்வியும் கேட்க முடியல..."
"ஏன்...?"
"கேள்வி நேரம் முடிஞ்சிடுச்சுன்னு எழுந்து போயிடறா..."
4. "நீங்க எப்பவும் சந்தோஷமா இருக்கீங்களே... எப்படி சுவாமிஜி?"
"ரெடியா முன் ஜாமீன் வாங்கி வைச்சிருக்கறதுதான் காரணம் சிஷ்யா!"
5. "தவிச்ச வாய்க்கு தண்ணி தராதவன் உருப்படுவானா?"
"உன்ன யாருயா டாஸ்மாக் பார்ல போயி கடன் கேட்கச் சொன்னது?"
