கேட்டரிங்
"என் பையன் இப்போ கல்யாணத்துக்கு ரெடி!"
"அப்படியா?!" "ஆமாம், கேட்டரிங் படிப்பு முடிச்சுட்டு நல்லா சமைக்கக் கத்துக்கிட்டான்."
"ஆனாலும் நம்ம தலைவர் சிலையை இவ்வளவு கேவலமா செஞ்சிருக்க வேண்டாம்."
"ஏன்?" "லஞ்சம் வாங்கறதுக்காக கை நீட்டறாப்பிலே பண்ணியிருக்காங்களே."
"என்னங்க சட்டையெல்லாம் எண்ணெய்யா இருக்கு...?"
"ஆபிஸில தலைவலின்னு டைப்பிஸ்ட் என் மேல கொஞ்சம் சாய்ந்திருந்தாள்...!"
"அந்த வீட்ல இப்பல்லாம் மாமியார் மருமகள் சண்டை போடுற சத்தமே காணோமே! சமரசம் ஆயிட்டாங்களா?"
"நீங்க ஒண்ணு... சண்டை போடுறதுக்குன்னே ஒரு ஏ.சி.ரூம் தயார் பண்ணிட்டாங்க!"
"என் வீட்டுக்காரரு ஐபிஎல் 20-20 மேட்ச் பார்த்ததிலேர்ந்து பெட்டிக்கடை வியாபாரத்தைக் கூட ஒழுங்காச் செய்ய மாட்டேங்கிறாரு."
"அவ்வளவு கிரிக்கெட் பைத்தியமா?" "தினமும் 12 மணி நேரம் வேலை பாத்துக்கிட்டு இருந்தவரு, இப்ப 2 மணி நேரத்திலேயே வீட்டுக்கு வந்துடறாரு."
