கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு
வாழ்க்கை வரலாறு
சென்னை மாகாணத்தின் முந்நாள் முதல்வரும் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவருமாவார். 1919 இல் நீதிக்கட்சியில் இணைந்த நாயுடு 1920-23 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் வளர்ச்சித் துறை அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் 1929-32 இல் தென்னாப்பிரிக்காவிற்கான பிரித்தானிய முகவராகவும், 1934-37 இல் இந்திய வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். 1936 சென்னை மாகாண ஆளுநர் எர்ஸ்கைன் பிரபு விடுப்பில் சென்ற போது அவருக்குப் பதிலாக தற்காலிக சென்னை ஆளுநராகப் பணியாற்றினார். 1937 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரசு ஆட்சியமைக்க மறுத்ததால் ஏற்பட்ட இழுபறிநிலையின் போது மூன்று மாதங்கள் சென்னை மாகாணத்தின் இடைக்கால அரசின் முதல்வராகப் பதவி வகித்தார். 1940-42 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பணியாற்றினார்.