குப்பையும் கோழியும் போல குருவும் சீடனும்
நாம் அறிந்த விளக்கம் :
கோழி குப்பையைக் கிளறித் தான் உண்ணுவதைத் தேடுவதுபோல, சீடன் குருவிடம் விசாரணை மூலம் தன் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.விளக்கம் :
சீடன் கோழியென்றால் குரு குப்பை என்று பொருளல்ல. கோழி குப்பையை கிளறும் உவமை சீடனுக்காகக் கூறப்பட்டது, குருவுக்காக அல்ல. ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் குப்பை போன்றதாகையால் தகுந்த குருவை அணுகி அவர் மூலம் தன் குப்பையை கிளறி உண்மையை அறியவேண்டும் என்பது இந்த பழமொழியின் உண்மையான விளக்கம் ஆகும்.
