கார்முகப் படலம் - 806

bookmark

சீதை தோழியை வினாதல்

806.    

வந்து அடி வணங்கிலள்; வழங்கும் ஓதையள்;
அந்தம் இல் உவகையள். ஆடிப் பாடினள்;
‘சிந்தையுள் மகிழ்ச்சியும். புகுந்த செய்தியும்.
சுந்தரி! சொல்’ என. தொழுது சொல்லுவாள்;
 
வந்து     அடி- வந்ததும் சீதையின்  அடிகளை; வணங்கிலள் -
விழுந்து   வணங்கவில்லை;  வழங்கும்   ஓதையள்   -  ஆரவாரம்
செய்பவளும்;   அந்தம்   இல்  உவகையள்   -    எல்லையில்லாத
மகிழ்ச்சியுடையவளுமாகி;  ஆடிப்  பாடினள் - ஆடுவதும்  பாடுவதும்
ஆயினாள்  (அதைக்  கண்ட  சீதை  அவளை  நோக்கி);   சுந்தரி  -
அழகானவளே;  சிந்தையுள்  மகிழ்ச்சியும்  -  உன்  மனமகிழ்ச்சியின்
காரணத்தையும்;   புகுந்த   செய்கையும்   -  (பெரு   மகிழ்ச்சிக்குக்
காரணமாக)  நடந்துள்ள  செயலையும்; சொல் - சொல்லுவாய்;  என -
என்று   கேட்க;   (அந்தத்தோழி  சீதையை) தொழுது  - வணங்கி;
சொல்லுவாள் - கூறலானாள்.

தலைவியைக்  கண்டவுடன் தோழி வணங்கவேண்டுவது முறையாகும்.
ஆனால்  பெரு  மகிழ்வால்  அத் தோழி வணங்காமல் ஆடிப்   பாடிக்
கொண்டிருந்தாள்.  பின்னர்ச்  சீதை அவளைக் கேட்கச்    செய்தியைக்
கூற முற்பட்டாள்.                                          57