கார்முகப் படலம் - 802
802.
‘விண்ணுளே எழுந்த மேகம்
மார்பின் நூலின் மின்னொடு. இம்
மண்ணுளே இழிந்தது என்ன.
வந்து போன மைந்தனார்.
எண்ணுளே இருந்த போதும்.
யாவரென்றுதோகிலென்;
கண்ணுளே இருந்த போதும்.
என்கொல் காண்கிலாதவே?
விண்ணுள் - வானத்தில்; எழுந்த மேகம் - தோன்றிய மேகமானது;
மின்னொடு - மின்னலுடன்; இம் மண்ணுள் - இந்த மண்ணுலகில்;
இழிந்தது என்ன - இறங்கியது என்று சொல்லுமாறு; மார்பின் நூலின்
- மார்பில் அணிந்துள்ள முப்புரி நூலுடன்; வந்துபோன -
(கன்னிமாடத்தின் முன் என் கண்கள் காணுமாறு) வந்து சென்ற;
மைந்தனார் - அப்பிரான்; எண்ணுளே - என் மனத்திற்குள்ளே;
இருந்தபோதும் - நீங்காது இருந்தாலும்; யாவர் என்று - இவர்
யாரென்று; தேர்கிலேன் - தெரிந்து கொள்ள முடியவில்லை;
கண்ணுளே - (என்) கண்களுக்கு எதிரே; இருந்தபோதும் -
காணப்பட்டாலும்; காண்கிலாதது - (இன்னாரென்று) அறிந்து கொள்ள
முடியாமல் இருப்பதற்குக் காரணம்; என்கொல் - என்ன?
கண்ணிற்குள்ளே இருப்பவரை இன்னாரென்று காணாமையும்
காலத்தாலும் இடத்தாலும் சேய்மையானவற்றையும் அறியவல்ல மனம்
தன்னுள் இருப்பவரை இன்னாரென்று தெரியாமல் இருப்பதும்
வியப்பானதே என்று சீதை கூறுகிறாள். பூணூல் தரித்த இராமனுக்கு
மின்னலோடு கூடிய மேகம் உவமையானது. 53
