காய்னை முழுங்கிட்டேன்

bookmark

கஜா: என்னப்பா! வியாபாரமெல்லாம் எப்படி நடக்குது ?
ஜான்: எல்லாமே தலைகீழா நடக்குது.
கஜா: என்னாச்சுது?
ஜான்: முன்னாலே வைர வியாபாரம் செஞ்சேன். இப்ப "ரவை" வியாபாரம் செய்யறேன்.

நோயாளி: தெரியாம காய்னை முழுங்கிட்டேன் டாக்டர் !
டாக்டர்: ஒரு ரூபா காய்னா.. ரெண்டு ரூபா காய்னா..?
நோயாளி: அதான் தெரியாம முழுங்கிட்டேன்னு சொல்றேன்ல...

லதா: முட்டைக்கு நடுவில் என்ன இருக்கு?
சுதா: மஞ்சள் கரு
லதா: இல்லை "ட்" இருக்கு