காத்து இரட்சிக்கணும் கன்னிமார்களை

bookmark

காத்து இரட்சிக்கணும் கன்னிமார்களை
கன்னிமூல‌ கணபதியே நீ
பாத்து இரட்சிக்கணும் பரிவு காட்டணும்
கன்னிமூல‌ கண‌பதியே

காத்து இரட்சிக்கணும் கருணை காட்டணும்
பொன்னு பகவதியே அம்மா பொன்னு பகவதியே
மாளிகை புறத்து மஞ்சம்மா
மாணிக்க‌ பாதம் தஞ்சம் அம்மா

நெய் மணக்குது மெய்யிருக்குது சபரிமலையிலே
அய்யனே உந்தன் அழகைக் கண்டால்
பக்தி பிறக்குது உள்ளத்திலே ஞான‌ சக்தி பிறக்குது
நெய்யபிஷேகம் செய்யும்போது உள்ளத்திலே
மெய் சிலிர்க்குது மலையிலே
தையினிலே உந்தன் சந்நதிகாண‌
உள்ளத்தில் ஆவல் பொங்கிடுதே
சத்தியமான‌ பொன்னு பதினெட்டு படி பகவானே
சுவாமி பொன்னு பகவானே அய்யா பொன்னு பகவானே
ஷண்முகன் தம்பியே உந்தன் தரிசனம் கிடைக்கவேணுமே

ஸ்வாமியே சரணம் ஐயப்பா
என்று சொல்லி நாங்கள் வந்தோமே
சங்கர‌ மோகினி பாலனே உந்தன்
தரிசனம் தனைக்காண‌ தயை புரிவாய் தேவனே
தயை புரிவாய் தேவியே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஐயப்ப‌ சரணம் ஐயப்பா