காதல்

காதல்

bookmark

காதலைப் போன்றே காதலிக்கப்பட்டவரும் இருப்பர்.

மதிப்பும் காதலும் ஒருபோதும் விற்பனைச் சரக்கல்ல.

விசிறிய தீயும் கட்டாயக் காதலும் இன்றுவரை நன்கு நடைபெற்றதில்லை.

(போலி) அன்புக்காகவே ஓநாய் ஆட்டை விழுங்குகிறது.

பொன்னையும் காதல் விவகாரத்தையும் மூடி மறைத்திட முடியாது.

அழ வைப்பவனே நன்கு காதலிப்பான்.

(அ) எவன் நன்கு தண்டிக்கிறானோ அவனே நன்கு காதலிப்பான் (ஆ) அடிக்கிற கையே அணைக்கும்.

ஒருபோதும் மறக்காதவனே நன்கு காதலிப்பவன்.

உணர்ச்சிமிக்க காதல் அவசரப் பழி தீர்த்தல்.

தேனினும் விசத்திலும் காதல் மிகுந்திருக்கும்.

பணிகளில் பார்கலாம் நேசத்தையும் விசுவாசத்தையும்.

காதல் பெற்றெடுத்திடும் காதல்.

காதலரின் பொய் வாக்குறுதி காதலைச் சிரிக்கவே வைத்திடும்.

(அ) கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் (ஆ) காதல் ஆபத்திற்கு அஞ்சவதில்லை.

தடைகள் காதலை வளர்க்கும்.

காதலுக்கு கண் இல்லை. மறைந்துள்ள பாதைகளை காதல் அறியும். பொறாமையின்றிக் காதல் இல்லை.

(அ) மனம் இருந்தால் மார்க்கமுண்டு (ஆ) காதல் வழியைக் கண்டுபிடிக்கும்.

பழங்காதல் துருப்பிடிக்காது (பளபளக்கும்).

உணவும் மதுவும் இன்றி காதல் இல்லை.

ஆன்மா வாழ்கின்ற இடத்தில் இல்லை காதலிக்கும் இடத்தில்தான்.

யாரையும் அதிகம் நேசிக்கிறோமோ அவரிடம் குறைவாகவே சொல்கிறோம்.

மதிப்பில்லாத இடத்தில் காதல் போய்விடும்.

காதல் தெய்வீகமானது.