கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை
கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்பவன் சங்ககால சேர மன்னன் ஆவான். இவனே கடைச்சங்ககால சேரர்களில் முதல் மன்னனாக அறியப்படுபவன். கருவூர் ஏறிய என்ற இவன் புணைப்பெயரைக் கொண்டு கருவூரை தலைநகராக்கி ஆண்ட முதல் சேரன் இவனென்று அறியலாம். ஒள்வாள் என்பது இவன் ஒளி படைத்த வாளைக்கொண்டவன் என்பதை கூறுகிறது. இவனைப் பற்றிப் பெரிதாக வேறெந்தத் தகவலும் கிடைக்க வில்லை.
