கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி

bookmark

தாவர இயல் பெயர்: Eclipta prostrata/ Eclipta alba

இதன் மறு பெயர்கள்: கரிக்கண்டு, கையாந்தகரை, கரிசனம், பொற்றலைக் கரிப்பான், கரிச்சான் பூண்டு, கையாள், பொற்கொடி, சாணாவு, சவுநாகம்

வளரும் இடங்கள்: தமிழகத்தில் பெரும்பாலும் காணப்படும் அனைத்து மாவட்டங்களிலும் ஈரமான நிலத்தில் தானே வளர்கிறது. அத்துடன் நீர் வளம் மிகுந்த இடங்களில் அதிகம் காணப்படுகிறது.

பயன் தரும் பகுதிகள்: முழுத்தாவரம், இலை, வேர்

பொதுவான தகவல்கள் : கரிசலாங்கண்ணி, வெண்கரிசாலை அல்லது கையாந்தகரை (Eclipta prostrata) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம். வெள்ளை கரிசலாங்கண்ணியை, அதன் வெள்ளைநிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம்.

கரிசலாங்கண்ணி ஞான மூலிகை என போற்றப்படுகிறது. மூலிகைகளில் கரிசலாங்கண்ணி தேச‌சுத்தி மூலிகை என பாராட்டப்படுகிறது. வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனப்படுகிறது. கையாந்தரை, கரப்பான், கரிசாலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அருமையான மருத்துவக் குணம் கொண்ட காய கல்ப மூலிகை இது.

கரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துக்கள்:-

நீர்=85% மாவுப்பொருள்=9.2% புரதம்=4.4% கொழுப்பு=0.8% கால்சியம்=62 யூனிட் இரும்புத் தாது=8.9 யூனிட் பாஸ்பரஸ்=4.62% இவை அனைத்தும் 100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள் ஆகும்.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது ஓராண்டுத் தாவரமாகும்.

மருத்துவப் பயன்கள்:

* கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமிநாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும்.

* கரிசலாங்கண்ணி இலையை நீர் விடாமல் சாறு எடுத்து அதை சோப்பு போடப்படாத வெள்ளைத் துணியில் நனைத்து நிழலில் உலர்த்தி, சுருட்டி திரியாக்கி சுத்தமான நெய் விளக்கில் எரித்தால் கருப்பு பொடியாக வரும். இதையே “கண் மை” ஆக நம் முன்னோர்கள் உபயோகித்தனர். இதனால் கண்கள் பிரகாசமாக ஆவதுடன், கண்கள் குளிர்ச்சி அடைந்து முகப்பொலிவு உண்டாகும். இது பழங்கால பாட்டி சொன்ன வைத்தியமாகும்.

* தொப்பையைக் குறைக்க தினமும் கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம். இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பை குறையும்.

* கரிசலாங்கண்ணி குழந்தைகளுக்கு உண்டாகும் மந்த நோய்களைப் போக்கும். கண்பார்வையை தெளிவுபெறச் செய்யும். கண் நரம்பு படலங்களில் உள்ள நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்தும் கண் வறட்சியைப் போக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவற்றை குணமாக்கும்.

* புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும் வல்லமை பெற்றது கரிசலாங்கண்ணி.

* சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால் இந்த நோய்க்கு கரிசலாங்கண்ணி சாறு தான் முதன்மையான மருந்து.

* கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து சாப்பிட்டாலும் நரை, மூப்பு சீக்கிரத்தில் வராது.

* இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள நீர்த்தன்மை வற்றிப்போகிறது. இதனால் இரத்தம் பசைத் தன்மை அடைகிறது. இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது. இவற்றை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் நீர்த்தன்மையை உண்டாக்குவற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து அருந்தலாம்.

* கரிசலாங்கண்ணி இலையை அரைத்து உடலில் தேய்த்துக் குளிக்க உடல் மினுமினுப்பு கூடும்!

* கரிசலாங்கண்ணி நரம்புத்தளர்வை போக்கும். மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்வு பெறச் செய்யும்.

* ஆஸ்துமா, இருமல், ஈளை போன்ற பாதிப்பு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் சுவாச காச நோய்கள் தீருவதுடன் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.

* கரிசலாங்கண்ணி இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும். மண்ணீரல், சிறுநீரகத்தைப் பலப்படுத்தும்.

* மஞ்சள் காமாலை, மகோதர வியாதி, சிறுநீர் எரிச்சல் ஆகிய அனைத்திற்கும் கரிசலாங்கண்ணி சிறந்த மருந்தாகும்.

* பெண்களின் பெரும்பாடு தீர கரிசலாங்கண்ணியை ஏதேனும் ஒரு வகையில் உணவில் சேர்க்க வேண்டும்.

* குழந்தைகளின் சளி உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது இந்தக் கரிசலாங்கண்ணி.

* ஆரம்ப கால மனநோய்க்கு கரிசலாங்கண்ணி தான் சிறந்த மருந்தாக சொல்லப்படுகிறது.

* கரிசலாங்கண்ணிச் செடியை வேருடன் எடுத்து மைய அரைத்துப் பூசினால் 'சிப்லிஸ்' என்னும் பால் வினை நோய் நீங்கும்.

* கரிசலாங்கண்ணிச் சாற்றையும் பசும் பாலையும் சம அளவு கலந்து பருகச் செய்தால் கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்கும்.