கனவு

bookmark

1. "என்னங்க! நேத்து ராத்திரி நீங்க எனக்கு பட்டுப் புடவை வாங்கித் தர்றா மாதிரி கனவு வந்தது..." 

"எனக்குக் கூட நீ உன்னோட தங்க செயினை அடகு வைக்க கழட்டித் தர்றா மாதிரி கனவு வந்தது..."

வி. சாரதி டேச்சு

2. "அம்மா அடிச்சதுக்கு ஏண்டா இப்படி அழறே?"

"போங்கப்பா, உங்களை மாதிரி என்னால அடிதாங்க முடியாது."

வி. விஜயலெட்சுமி.

3. "டார்லிங், நீங்க வீட்டோட மாப்பிள்ளையாக இருப்பீங்களானு எங்க அப்பா கேட்கச் சொன்னார்."

"உங்க அப்பாவுக்காக இல்லாவிட்டாலும் உன் தங்கைக்காகவாவது இதற்கு சம்மதிக்கிறேன்."

கொனக்குடி சரவணன்.

4. ஆபரேஷன் தியேட்டர்ல டெலிபோன் வைக்க வேண்டாம்னு சொன்னேனே கேட்டீங்களா டாக்டர்?

ஏன்?

இப்ப அதுவும் டெட் ஆயிடுச்சு!