கணவன் மனைவி ஜோக்ஸ் 8

bookmark

ம‌னைவி : ந‌ம‌க்கு க‌ல்யாண‌ம் முடிஞ்சி இன்னியோட‌ ப‌த்து வ‌ருச‌ம் ஆகுது?

க‌ண‌வ‌ன் : என‌க்கு அதெல்லாம் ம‌ற‌ந்து போச்சு.

ம‌னைவி : இது கூட‌வா?

க‌ண‌வ‌ன் : ஆமாண்டி, ந‌ல்ல‌ விச‌ய‌ங்க‌ளை ம‌ட்டும் தான் நான் ஞாப‌க‌ம் வ‌ச்சிக்குவேன்.

-***-


மனைவி : ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல!

கணவன் : நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?

-***-


கணவன் : ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!

மனைவி : ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்?

-***-


மனைவி : உங்க அம்மாவுக்கு சப்பாத்தி போட்டா பிடிக்கல இட்லி தோசை போட்டா பிடிக்கல உப்புமா போட்டா பிடிக்கல. . .

கணவன் : வேற என்னதான் போட்ட?

மனைவி : பேசாம பட்டிணி போட்டேன்.

-***-


மனைவி : டின்னர் வேணுமா?

கணவன் : சாய்ஸ் இருக்கா?

மனைவி : ரெண்டு இருக்கு!

கணவன் : என்னன்ன?

மனைவி : வேணுமா? வேண்டாமா?

-***-