கணவன் மனைவி ஜோக்ஸ் 26

bookmark

மனைவி : என்னங்க நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே...

கணவன் : உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு...

-***-


கணவன் : எங்கம்மாவுக்கு மூச்சுவிட ரொம்ப சிரமமா இருக்காம் கமலா !'

மனைவி : அவ்வளவு சிரமப்பட்டு எதுக்கு மூச்சு விடணும்னு கேக்கறேன் !'

-***-


கணவன் : ஏன் ஒரு மாதிரி இருக்க?

மனைவி : அத இப்ப தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க?

கணவன் : சரி விடு..

மனைவி : அதான.. நான் எப்படிப்போனா உங்களுக்கென்ன?

-***-


மனைவி : கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க

கணவன் : ஏன் .. .. ? மனைவி : அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே

-***-


மனைவி : உங்களுக்கு ஞாபகம் இருக்கா, நீங்க எங்கிட்ட முதன் முதல்ல `ஐ லவ் யூ’ சொன்னப்ப, நான் திக்கு முக்காடிப்போய் ஒரு மணி நேரம் பேசாமலேயே இருந்தேன்..

கணவன் : பின்ன ஞாபகம் இருக்காதா, அந்த 1 மணி நேரந்தான் என் வாழ்க்கையிலேயே கடைசியா நான் மகிழ்ச்சியா இருந்தேன்...

-***-


மனைவி : இந்தாங்க லட்டு..

கணவன் : எதுக்கு..?

மனைவி : நான் கர்ப்பமா இருக்கேன்..

கணவன் : அட.. ரொம்ப சந்தோசமான விசயம் உன் அப்பா அம்மாட்ட சொல்லிட்டியா?

மனைவி : சொல்லலை

கணவன் : ஏன் ?

மனைவி : அடிப்பாங்க

கணவன் : அடிப்பாங்களா? என்றான் வியப்பாக! அதற்கு

மனைவி : ஆமாங்க இப்படித்தான் நான் காலேஜ்ல படிக்கும் போது ஒரு தடவ சொன்னேன். பின்னி எடுத்துட்டாங்க

-***-