கணவன் மனைவி ஜோக்ஸ் 24

bookmark

மனைவி : “நீங்க எனக்கு ஒரு பட்டுப் புடவை வாங்கித்தர்ற மாதிரி நேற்று கனவு கண்டேன்“

கணவன் : “இன்னைக்கு அதைக் கட்டிக்கிறதா கனவு கண்டுவிடு. சரியாய்ப் போயிடும்...“

-***-


மனைவி : ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க?

கணவன் : இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு

-***-


கணவன் : “ஏன் நான் உள்ளாற வந்தவுடனே கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கிடுற?“

மனைவி : “டாக்டர் தான், தலைவலி வந்தவுடனே கண்ணாடியைப் போட்டுக்கச் சொன்னார்.“

-***-


கணவன் : பெண்கள் ஒரு நாளைக்கு 40,000 வார்த்தைகள் பேசறாங்களாம். ஆனா!!ஆண்கள் அதுல பாதிதான் பேசறாங்களாம். என்ன காரணம் தெரியுமா?

மனைவி : அதுவா.. எல்லாத்தையும் ஆண்களுக்கு திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கு. அதனால்தான் பெண்கள் அதிகம் பேச வேண்டியிருக்கு.

கணவன் : என்னது?திரும்ப சொல்லு..

-***-


மனைவி : என்னை எந்த அளவு காதலிக்கிறீங்க

கணவன் : ரொம்ப, சொல்லப்போன ஷாஜகான் மாதிரின்னு வச்சிக்கோயேன்

மனைவி : சரி, அப்படீன்னா எனக்காக தாஜ்மகால் கட்டுவீங்களா

கணவன் : பிளாட் ரெடியா இருக்கு, நீ தான் லேட் பண்ணிக்கிட்டு இருக்க

-***-