கணவன் மனைவி ஜோக்ஸ் 20

bookmark

கணவன் : “வரதட்சணை வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது“

மனைவி : “அதுக்காக இப்போ என்ன பண்ணுவதாம்...?“

கணவன் : “வரதட்சணை வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யலாம்ன்னு இருக்கேன்“

மனைவி : கர்ர்ர்ர்ர்ர்.....

-***-


கணவன் : என்னோட கண்ண நல்லா பாரு. என்ன தெரியுது?

மனைவி : உங்க உண்மையான அன்பு தெரியுதுங்க..

கணவன் : நாசமா போச்சு. தூசு விழுந்திருக்குடி. அதை எடு.

-***-


மனைவி : சாப்பாடு போட வா?

கணவன் : அடியே இன்னைக்கு நான் ஓட்டல்ல சாப்பிட்டுட்டேன்

மனைவி : அது சரி எவ்வளவு மாவாட்டிட்டு வந்தீங்க*

-***-


மனைவி : நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?

கணவன் : அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது... நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்...

-***-


மனைவி : பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும்வரை என்ன பண் ணிட்டீருந்தீங்க?

கணவன் : இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

-***-