கணவன் மனைவி ஜோக்ஸ் 16

bookmark

மனைவி : ஏங்க இன்னைக்கு குழம்பு வைக்கட்டுமா இல்ல ரசம் வைக்கட்டுமா?

கணவன் : முதல்ல எதாவது ஒன்னு வை... அப்பறமா அதுக்கு பேரு வச்சுக்கலாம்.

-***-


மனைவி : என்னங்க... ஒரு வாரமா தினமும் காலண்டர் வாங்கிகிட்டு வர்றீங்க?

கணவன் : நீ தானே 'டெய்லி காலண்டர்' வாங்கிகிட்டு வர சொன்னே?

-***-


மனைவி : என்னங்க செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருக்கணுமாம்…………..

கணவன் : அதனால தாண்டி அது சொர்க்கம் ………..!

மனைவி :. . . . ????

-***-


கணவன் : ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!

மனைவி : ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்

-***-


மனைவி : ராத்திரி தூக்கத்தில ஏன் சிரிச்சிங்க.?

கணவன் : கனவுல அனுஷ்கா வந்தா..!

மனைவி : அப்பறம் ஏன் கத்துனீங்க.?

கணவன் : நடுவுல நீ வந்துட்ட..

-***-