கணவன் மனைவி ஜோக்ஸ் 14

bookmark

கணவன் : என் அம்மா மேலே உனக்குக் கொஞ்சம்கூட மரியாதையே இல்லை.

மனைவி : என்னங்க இப்படி சொல்லிட்டீங்க! தினமும் மனசுக்குள்ள உங்க அம்மா படத்துக்கு ஊதுபத்தி கொளுத்தி மாலையெல்லாம் போடறேன் தெரியுமா?

-***-


மனைவி : (சலிப்புடன்) மாறுவேசம் போட்டியில் கலந்து கொண்டு மேகப் போட்டது வீணாபோச்சு..

கணவன் : ஏன் என்ன ஆச்சு?

மனைவி : பரிசு கிடைக்கவில்லை

கணவன் : என்ன வேசம் போட்ட?

மனைவி : பத்ரகாளி வேசம்

கணவன் : மேக்கப் போடாம போயிருந்தால் பரிசு கிடைத்திருக்கும்...

-***-


கணவன் :சாமி கிட்ட என்ன… மா வேண்டிகிட்ட?

மனைவி : அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன்ங்க…நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?

கணவன் : எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம்னு வேண்டிகிட்டேன்…

மனைவி : ?????

-***-


மனைவி : எதுக்குங்க மருந்து சாப்பிடும்போது ஸ்பூனை பாதியா உடைக்கிறீங்க?

கணவன் : டாக்டர்தான் அரை ஸ்பூன் மருந்து சாப்பிடச் சொன்னாரு.

-***-


மனைவி : ஏங்க… கொஞ்சம் வாங்க… குழந்த அழுவுது…

கணவன் : அடி செருப்பால! … உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?

-***-