கணவன் மனைவி ஜோக்ஸ் 10

bookmark

மனைவி : போதை ஏறிட்டுதுன்னா அதுக்காக இப்படியா ?

கணவன் : ஏன் ,,, அப்படி என்ன பண்ணினேன் பங்கஜம் ?

மனைவி : உங்க கையில இருக்கிறது பிராந்தி பாட்டில் இல்ல கெரஸின் பாட்டில்.

-***-


மனைவி : அட.. நமக்கேத்த சரியான ஜோடி இவதான்னு நம்ம கல்யாணத்தன்னிக்கு சந்தோஷப்பட்டீங்களா, டியர்..?

கணவன் : ஏய்.. என்ன உளர்றே? நம்ம கல்யாணத்தன்னிக்கு நீ மட்டும்தானே மணப்பொண்ணு கோலத்துல இருந்தே..?

-***-


கணவன் : பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?

மனைவி : நான் என்ன பண்றது அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.

-***-


மனைவி : "ஒரு நாள் வேலைக்காரி இல்லைன்னா கூட வீடே சரியில்ல பாருங்க."

கணவன் : "இது பரவாயில்லை. எனக்கு மனசே சரியில்லாம போயிடுது பாரு."

-***-


கணவன் : "வயசான என் அம்மா மேல உனக்கு மரியாதையே இல்ல"

மனைவி : "தயவு செஞ்சு அப்டி சொல்லாதீங்க. தினமும் மனசுக்குள்ளேயே உங்க அம்மா படத்துக்கு ஊதுபத்தி கொளுத்தி மாலையெல்லாம் போடறேனே."

-***-