கடிமணப் படலம் - 1342

bookmark

பெண்ணின் பரிசு வகைகள்

 தேவியர் சீதைக்குப் பரிசளித்தல்
 
1342.    

‘எண் இல கோடி பொன். எல்லை இல் கோடி
வண்ண அருங் கலம். மங்கையர் வெள்ளம்.
கண் அகல் நாடு. உயர் காசொடு தூசும்.
பெண்ணின் அணங்கு அனையாள் பெறுக!’ என்றார்.
 
‘எண்    இல கோடி  பொன்-  (மேலும் அத்தேவியர்  மூவரும்)
‘அளவற்ற  கோடிப்பொற்  காசுகளையும்; எல்லை இல் கோடி வண்ண
அருங்கலம்   -   அளவற்ற   கோடியான  அழகிய   கிடைத்தற்கரிய
அணிகலங்களையும்;     மங்கையர்     வெள்ளம்-பணிப்பெண்களின்
பெருந்திரளினையும்;   கண்அகல்   நாடொடு   -  இடமகன்ற  (சில)
நாடுகளையும்; காசு உயர் தூசும் - விலையுயர்ந்த  பட்டாடைகளையும்;
பெண்ணின் அணங்கு அனையாள் பெறுக’ என்றார் -பெண்களுக்குத்
தெய்வம்போலச்       சிறந்தசானகி        பெறுவாளாக’      என்று
கூறிக்கொடுத்தனர்.                                          97