கடன்

bookmark

1. "உன் மாமியார் அடிக்கடி ஆஸ்பத்திரிக்குப் போய் எதுக்கு வாயில் தையல் போட்டுக்கறாங்க...?" 

"அவங்கதான் வாய் கிழியப் பேசுவாங்களே!"

2. "காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுறாங்க?"

"அவங்க "மெய்" மறந்து காதலிக்கிறவங்களாச்சே!"

3. "எதையும் காசு கொடுத்து வாங்கினாத்தான் ஒட்டும்...."

"அதுக்காக ஓசியில வாங்கின பசை கூடவா ஒட்டாது....?"

4. "தலைவர்கிட்ட யார் கடன் கேட்டாலும், வட்டி பிடிச்சிக்கிட்டுத்தான் தருவார்..."

"மகளிர் அணித் தலைவி கேட்டா...?"

"கட்டிப் பிடிச்சிக்கிட்டுத்தான் தருவார்!"

5. "ஊசி போடும்போது கண்ணை மூடிட்டீங்களே.... மனசுல சாமியை நினைச்சுக்கிட்டீங்களா?"

"இல்ல டாக்டர்.... நர்ஸை நினைச்சுகிட்டேன்....!"