கங்கைப் படலம் - 2043
குகன் இயல்பு (2043-2050)
குகனது அறிமுகம்
கலிவிருத்தம்
2043.
ஆய காலையின், ஆயிரம் அம்பிக்கு
நாயகன், போர்க் குகன் எனும் நாமத்தான்,
தூய கங்கைத் துறை விடும் தொன்மையான்,
காயும் வில்லினன், கல் திரள் தோளினான்.
ஆய காலையின் - அந் நேரத்தில்; ஆயிரம் அம்பிக்கு நாயகன்-
ஆயிரம்நாவாய்களுக்குத் தலைவனும்; தூய கங்கைத் துறை விடும்
தொன்மையான் - தூய்மையானகங்கைத் கரையில் நெடுங்காலமாகப் படகு
விடும் தன்மை உடையவனும்; காயும் வில்லினன் -பகைவரைச் சீறி
அழிக்கும் வில்லுடையவனும்; கல் திரள் தோளினாள் - மலை போல்
திரண்ட தோளை உடையவனும் ஆகிய; போர் - போர்த் தொழிலில் வல்ல;
குகன் எனும்நாமத்தான் - குகன் என்ற பெயரை உடையவன்.
குளகச் செய்யுள். ‘இருந்த வள்ளலைக் காண வந்து எய்தினான்’ (1961)
என்னும் செய்யுள்அடியிற் சென்று முடியும். இனி வரும் செய்யுள்களில்
குகனைப் பற்றிய அறிமுகத்தைத் தொடர்கிறார்கவிஞர். 1
