ஒற்றுமை

bookmark

சீப்புக்கும் வாழைப்பழத்து தோலுக்கும் ஓர் ஒற்றுமை. அது என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!
தெரியாது!
சீப்பு தலை வாரும்; வாழைப்பழத் தோல் காலை வாரும்.

அது ஓர் அழுகை சினிமா. படம் பார்க்கும் போது அழுதுவிட்டேன்!
எந்த இடத்தில்?
உட்கார்ந்து கொண்டு படம் பார்த்த அதே இடத்தில் தான்.

நம்ப டைப்பிஸ்டை நிமிர்ந்து பார்க்காதவன் புதுசா வந்த கிளார்க்தான்!
அதிசயமாயிருக்கே!
காரணம். அவன்தான் அவ புருஷன்.

இண்டர்வியூவில்: என்னப்பா! நாற்காலியை எடுத்துக்கிட்டுப் போறே?
நீங்கதானே சார், டேக் யுவர் சீட்னு சொன்னீங்க! 
அவன் ஏன் நீலநிறச் சட்டை போட்டுக் கொண்டிருக்கிறான் தெரியுமா?
தெரியலையே!
வெறும் பனியனை மட்டும் போட்டுக் கொண்டு ஆபீசுக்கு வரக்கூடாது என்று தான்.