ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

bookmark


ஐயடிகள் காடவர்கோன் நாயனர் அவர்களின் காலம் கி.பி. 670 இல் இருந்து கி.பி. 685 வரை என எண்ணப்படுகிறது.

ஐயடிகள் காடவர்கோன் நாயனாரின் பெயர் விளக்கம்:-

காடர் என்பது பல்லவ மன்னர் குலத்தினரைக் குறிக்கும் பொதுப்பெயர். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூவாகும். ஐயடிகள் காடவர்கோன் என்னும் பெயர் ஐயனடிகளாகிய பல்லவ மன்னர் என்ற பொருள் தரும் பெயராகும். இவர் குறுநில மன்னராகக் காஞ்சிபுரத்தில் அரசாட்சி செய்து வந்தார்.

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் துறவுள்ளம் சென்ற கதை:-

மன்னரெல்லாம் தம் ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சி செய்த இம்மன்னர் அரசுரிமையை தன் சிவனடித் தொண்டிற்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன் பால் ஒப்புவித்து தலயாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துச் சிவ தலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப் பாடினார். அவ்வெண்பாக்களில் 24 பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றின் தொகுப்பே சேத்திரத் திருவெண்பா எனப் பெறுகின்றது. இப்பாடல்கள் பலவற்றிலும் நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம் இப்பாடல்களில் இருக்கக் காணலாம்.

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் அவர்களின் குரு பூசை நாள் ஐப்பசி மூலம் ஆகும்.

இவரது வாழ்வின் நுண்பொருள் :-

1. அரச வாழ்விலும் அடியாராய் வாழ்தல் மேலானது.

2. திருத்தல தரிசனம் திருவடிப் பேறு நல்கும்.