எழுச்சிப் படலம் - 821

bookmark

தூதர்க்கு ஆடையும் அணியும் அளித்தல்

தூதருக்கு அணிகலன் முதலியன வழங்குதல்
 
821.

என்று உரைத்து எதிர். எதிர் இடைவிடாது. ‘நேர்
துன்றிய கனை கழல் தூதர் கொள்க!’ எனா.
பொன் திணி கலங்களும் தூசும் போக்கினான் -
குன்று என உயரிய குவவுத் தோளினான். *
 
குன்று என உயரிய- மலைபோலத் திரண்ட; குவவுத் தோளினான்
-  பருத்த  தோள்களையுடைய தசரதன்; என்று எதிர் எதிர் - (என்று
வசிட்டர்  முதலோர்  முன்) மறுமொழிகள்; உரைத்து - சொல்லி; நேர்
துன்றிய   -  ஒன்றோடு  ஒன்று  ஒத்துள்ள;  கனைகழல்  தூதர்  -
ஒலிக்கின்ற   வீரக்   கழலையணிந்த  தூதர்கள்;   கொள்க  என  -
பெற்றுக்கொள்வார்களாக   என்று;   பொன்திணி   கலங்களும்   -
பொன்னாலான   அணிகலன்களையும்;    தூசும்  -  ஆடைகளையும்;
இடைவிடாது போக்கினான் - இடைவிடாது மேலும் மேலும் கொடுக்கச்
செய்தான்.

தன்     மைந்தனது வீரச் செயலைக்  கேட்ட  தசரதன்  மகிழ்ச்சிப்
பெருக்கால்  தூதுவர்க்கு   அணிகலன்   முதலியவற்றைக்  கொடுத்தான்
என்பது.                                                   6