என் ஆவியும் தூய ஆவியும்

bookmark

என்னுள்ளே இணைந்துவிட்டால் - ஆனந்தம் ஆனந்தமே -2

1. ஆனந்தம் என்று சொல்வதா அதை
அருட்பெருக்கு என்றுரைப்பதா
இன்ப வனம் என்று கூறவா அதை
இறையாற்றல் என்றழைப்பதா
பேரானந்தம் பரமானந்தம் நிறையானந்தம் இறையானந்தம்

2. தீ நாக்கு தூய ஆவியா தீப்பிழம்பு எந்தன் ஆவியா
தீமைகளைச் சுட்டெரிக்குமே அதன்
தீச்சுடரில் வளர்ச்சி தோன்றுமே
பேரானந்தம் பரமானந்தம் நிறையானந்தம் இறையானந்தம்