எதிர்கொள் படலம் - 1146
மாளிகைகளின் வருணனை
1146.
சூடகம் துயல்வர. கோதை
சோர்தர. மலர்ப்
பாடகம் பரதநூல்
பகர. வெங் கட கரிக்
கோடு அரங்கிட எழும்
குவி தடங் கொங்கையார்.
ஆடு அரங்கு அல்லவே -
அணி அரங்கு அயல் எலாம்.
அணி அரங்கு அயல்எலாம்- (அந்த நரகத்து வீதிகளிலுள்ள)
அழகிய மண்டபங்களின் பக்கங்களில் எல்லாம்; சூடகம் துயல் வர.
கோதை சோர்தர - தம் கைவளைகள் அசையவும். கூந்தல் தளர்ந்து
சரியவும்; மலர்ப் பாடகம் பரத நூல் பகர - செந்தாமரை மலர்
போன்ற மெல்லிய பாதங்களில் பாடகம் என்னும் காலணிகள் (நாட்டிய
சாத்திரமாகிய) பரத நூலிற் கூறப்பட்ட தாளவிதி முறைகளைத் (தம்
ஒலியால்) வெளிப்படுத்தவும்; வெங்கடகரிக்கோடு அரங்கிட எழும்
குவிதடங்கொங்கையர் - கொடிய மதமுடைய யானைகளின் கொம்புகள்
(அழகு) கெடும்பிடியாக. எழுந்து குவிந்து அகன்ற பெரிய
தனங்களையுடைய மகளிர்; ஆடுஅரங்கு அல்ல - ஆடல்புரியும் நடன
அரங்குகள் போல (எங்கும்) தோன்றினும் நடன அரங்கங்கள் என்று
கருதவேண்டா;அவர்கள் வாழும் மாளிகைகளே அவை என்று துணிக.
துணிக.
வளை ஒலியும். குழல் சரிவும். காரணித் தாளமுமாகச் சூழ
மங்கையர் ஒல்கி ஒசிந்து நிற்கும் இடம் எல்லாம் ஆடரங்கம் என்றே
தோன்றும்; ஏமாற வேண்டா; அவரவர் மாடமாளிகைகளே எனச்
சுறையுறக் கூறினார். மாளிகைகள் யாவும் அன்று மகளிர் ஆடரங்கம்
போல மகிழ்வில் திளைத்தன என்பதாம். 33
