எதிர்கொள் படலம் - 1115
சேனை கங்கை நீரைப் பருகுதல்
1115.
கப்புடை நாவின் நாகர்
உலகமும் கண்ணில் தோன்ற.
துப்புடை மணலிற்று ஆகி.
கங்கை நீர் சுருங்கிக் காட்ட.
அப்புடை அனீக வேலை
அகன் புனல் முகந்து மாந்த.
உப்புடைக் கடலும். தெண் நீர்
உண் நசை உற்றது அன்றே.
கப்பு உடை நாவின் நாகர் உலகமும் கண்ணில் தோன்ற -
பிளவுபட்ட நாக்கினையுடைய நாகர்களின் உலகம் ஆகிய பாதாள
லோகமும் கண்ணுக்குத் தோன்றுமாறு; துப்புடை மணலிற்று ஆகிக்
கங்கை நீர் சுருங்கிக் காட்ட - தூய்மையுடைய மணலைப் பெற்றதாய்.
கங்கைநதி தண்ணீர் குறைந்து தோன்றும்படி; அப்பு உடை அனீக
வேலை அகன் புனல் முகந்து மாந்த - அம்பு முதலிய ஆயுதங்கள்
மிகுந்த அந்தச் சேனா சமுத்திரம். அகன்று கிடந்த அக்கங்கை நீரை
எடுத்துப் பருகியதனால்; அன்று. உப்புடைக் கடலும் தெண்ணீர்
உள்நசை யுற்றது - உப்புத்தன்மையுடைய (உவர் நீர்க்) கடலும்
அப்பொழுது தெளிந்த அக்கங்கையின் நீர் (போய்ச் சேராததனால்)
நீர் வேட்கை கொண்டது.
உப்புக் கடலுக்குச் சென்று சேரும் கங்கையை. சேனைக் கடல்
உண்டு விட்டது என்தாம். உப்பு நீர். தாகம் தீர்க்காது. அதனை
மிகுதிப் படுத்தும். ஆதலால் உப்புக் கடலை உண்டு தன் தாகம்
தீர்த்து வந்தது. இன்று. தசரதன் படைக் கடல் கங்கைப் பெருக்கை
உண்டு விட்டதனால். உப்புக்கடலாகிய சமுத்திரம் அன்று தாகம் மிகக்
கொண்டது என்று. சேனையின் பெருமை கூறியவாறு. உயர்வு
நவிற்சியணி. 2
