உலாவியற் படலம் - 1167
ஒருத்தி தன் உள்ளத்து இராமனை ஒடுக்குதல்
பற்பல மகளிரின் நிலைகள்
கலி விருத்தம்
1167.
தையல். சிற்றிடையாள். ஒரு தாழ்குழல்.
உய்ய மற்றுஅவள் உள்ளத்து ஒடுங்கினான்-
வையம் முற்றும் வயிற்றின் அடக்கிய
ஐயனின் பெரியார் இனி யாவரே?
தையல் சிற்றிடையாள் ஒரு தாழ் குழல்- பார்ப்பவர் உள்ளத்தில்
தைக்கும் அழகினையுடையாளும். சிறிய இடையினையுடையாளும்
தாழ்ந்த கூந்தலினையுடையாளும் ஆகிய ஒருமங்கை ; உய்ய மற்று
அவள் உள்ளத்து ஒடுங்கினான் - (வருந்தாமல்) வாழுமாறு அவள்
உள்ளத்துக்குள்ளே (இராமபிரான்) அடங்கியிருந்தான்; அவள் யார்
எனின்;வையம் முற்றும் வயிற்றின் அடக்கிய - உலகம் முழுவதையும்
தன்திரு வயிற்றிலே (ஒருகாலத்தே) அடக்கி வைத்த; ஐயனில் பெரியார்
யார் இனியாவர் - தலைவன் அப்பெருமானை விடப் பெரியவர் வேறு
யாவர் உளர்? 20
