உம்மைத் தேடி வருகின்றேன் அந்தோனி மாமுனியே
உம்மைத் தேடி வருகின்றேன் அந்தோனி மாமுனியே
உம்மையே பாடிப் புகழுகின்றேன் என் துணை நீதானே
1. புவியினில் புதுமைகள் புரிந்ததனால்
புதுமையில் புனிதராய்ப் புகழடைந்தீர் (2)
அனைவரும் கைவிட்டுப் பிரிந்தாலும்
ஆதரவாய் என்னைத் தாங்கிடுவீர் (2)
ஆதாரம் நீயே அன்பினில் எனையே
தோள்களில் தாங்கிக் கொள்வாய் (2)
1. கருணையின் தீபமும் நீயல்லவா
தினம் எமைக் காப்பதுன் கரமல்லவா (2)
துயரங்களாலே சோர்ந்த எங்கள்
சுமைகளை சுகமாய் மாற்றுமையா (2)
மலைபோல் இடர்கள் சூழ்ந்துகொண்டாலும்
பனிபோல் மறையச் செய்வாய் (2)
