உடல் நலம் கெட்ட பயணம்
ரயில் வண்டியில் பயணம் செய்து இறங்கிய நண்பனைப் பார்த்து, "ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்? உடல் நலம் இல்லையா?" என்று கேட்டான் ஒருவன்.
"நான் எப்பொழுது பயணம் செய்தாலும் இஞ்சின் பக்கம் பார்த்தபடி அமர்வேன். நன்றாக இருக்கும். இன்று எதிர்பக்கத்தில் அமர்ந்து வந்தேன். அதனால் உடல் நலம் கெட்டு விட்டது." என்றான் நண்பன்.
"எதிரில் இருப்பவரிடம் உன் நிலைமையைச் சொல்லி இடம் மாற்றி அமர்ந்து இருக்கலாமே?"
"நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் எதிரில் யாரும் அமர்ந்திருக்க வில்லையே. நான் என்ன செய்வேன்?"
