ஈக்காடு சீனிவாசன் லட்சுமி நரசிம்மன்
வாழ்க்கை வரலாறு
ஈக்காடு சீனிவாசன் லட்சுமி நரசிம்மன் ஒரு இந்திய அரசியல்வாதியும், டிசம்பர் 2009 முதல் இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் ஆளுநராவார். அதற்கு முன் 2007 முதல் 2010 வரை சத்தீசுக்கரின்(Chattisgarh) ஆளுநராகவும் பதவி வகித்தார் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக ஜூன் 2, 2014 அன்று பதவியேற்றுக் கொண்டார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நரசிம்மன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றவர். அரசியல் அறிவியல் மற்றும் சட்டத்தில் பட்டமேற்படிப்பு தொடர்ந்தார். புது தில்லியில் தேசிய பாதுகாப்புப் படை கல்லூரியில் தமது கல்வியை முடித்து இந்தியக் காவல் பணியில் சேர்ந்தார்.
நரசிம்மன் ஆந்திரப் பிரதேசத்திற்கான 1968ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணி கூற்றினைச் சேர்ந்தவர். 1981ஆம் ஆண்டு முதல் 1984 வரை மாசுகோ தூதரகத்தில் முதல் செயலாளராக பணி புரிந்தார். மிகவும் மதிப்பிற்குரிய அறிவுசால் அதிகாரியாக கருதப்பட்டார். பல ஆண்டுகள் ஒற்று அமைப்பில் பணி புரிந்து பதவி உயர்வுகள் பெற்று டிசம்பர் 31, 2006 ஆம் ஆண்டு இவ்வமைப்பின் இயக்குநராக பணி ஓய்வு பெற்றார்.
அரசியல் வாழ்க்கை:
ஜனவரி 19, 2007 அன்று நரசிம்மன் சத்தீசுக்கர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு ஜனவரி 25 அன்று பதவியேற்றுக் கொண்டார். டிசம்பர் 27, 2009 அன்று ஆந்திரப் பிரதேச ஆளுநர் நாராயண் தத் திவாரி பாலியல் அவதூற்றினால் பதவியிலிருந்து விலகியபோது அம்மாநில ஆளுநராக தற்காலிக கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டார். ஜனவரி 23, 2010 முதல் ஆந்திரப் பிரதேசத்தின் முழுநேர ஆளுநராக முறைப்படி நியமிக்கப்பட்டார்.
