இயேசு பிறந்த நாளிது வானம் மகிழ்ந்து ஒளிருது

bookmark

காலம் கனிந்த காலையில் கடவுள் தந்த கொடையிது

1. மணமில்லாத மலரை போல் இசையில்லாத பறவைப் போல் (2)
அருளில்லாத பாருலகம் அடைந்த துயரம் மாறவே - 2
துள்ளி மகிழும் குழந்தையே உள்ளம் கொள்ளை கொண்டதே (2)
உந்தன் அன்பின் வரவிலே
விண்ணும் மண்ணும் இணைந்ததே - 2

2. தொழுவில் தவழும் பாசமே கடவுள் தந்த திருமொழி - 2
சிந்தை குளிரும் பூமுகமே உலகை ஒளிரச் செய்யுமே - 2