ஆழமா படிக்க...
ஏன் உங்க பையன் கிணற்றுக்குள்ளே போய் படிக்கிறான்
நான்தான் அவனை ஆழமா படிக்கச் சொன்னேன்.
ஒரு பேப்பர் மசாலா கொண்டுவாப்பா.
ரூல்டா அன்ரூல்டா?
என்னுடைய அலாரக்கடிகாரம் முதல்முறையாக இன்று என்னை எழுப்பியது.
எப்படி?
என் மனைவி அதைக்கொண்டு என் மண்டையில் ஓங்கி ஓர் அடி கொடுத்தாள்.
வெறும் கையால் மின்சார கம்பிகளை நம்மால் தொட முடியுமா?
ஓ, ஒரே ஒரு முறை தொடமுடியுமே!
என்.டி. ராமாராவும் நாகேஸ்வரராவும் திருப்பதிக்கு ஒண்ணா எப்படிப் போவாங்க?
ராவோட ராவா.
