ஆற்றுப் படலம் - 19

bookmark

வெள்ளம் வான வில்லை ஒத்தமை

வானவில்: வெள்ளம்
 
19.

பூ நிரைத்தும், மென் தாது பொருந்தியும்,
தேன் அளாவியும், செம் பொன் விராவியும்,
அனை மா மத ஆற்றொடு அளாவியும்,
வான வில்லை நிகர்த்தது - அவ் வாரியே.
 
அவ்  வாரி- அந்த வெள்ளப் பெருக்கு; பூ நிரைத்தும்  - பல நிற
மலர்களை     வரிசைப்படுத்தியும்;        மென்            தாது
பொருந்தியும்-மென்மையான  மகரந்தப்  பொடி பொருத்தப்  பெற்றும்;
தேன்     அளாவியும்-தேனொடு     கலந்தும்;        செம்பொன்
விராவியும்-செம்பொன்  கலந்தும்;  ஆற்றொடு-ஆற்றிலே; ஆனை மா
மதம்    அளாவியும்-ஆனைகளின்    மிகுந்த    மதநீர்   கலந்தும்;
வானவில்லை     நிகர்த்தது-பலநிறங்கள்   கொண்ட    வானவிலை
ஒத்திருந்தது.

பல  நிறங்கள்   கொண்ட   பொருள்கள்   ஆற்று   வெள்ளத்தில்
கலந்திருந்த காட்சி வானவில்லைக் கண்டதுபோல் இருந்தது கருத்து.  8