ஆறு செல் படலம் - 2347
2347.
‘வேத்தவை இருந்த நீர், விமலன் உந்தியில்
பூர்தவன் முதலினர் புவியுள் தோன்றினார்,
மூத்தவர் இருக்கவே, முறைமையால் நிலம்
காத்தவர் உளர்எனின், காட்டிக் காண்டிரால்.
‘வேத்தவைஇருந்த நீர்-அரசவையில் அமர்ந்துள்ள நீவிர்;
விமலன் உந்தியில் பூத்தவன் முதலினர் -திருமாலின்திருவுந்தித்
தாமரையில் தோன்றிய பிரமதேவன் முதலிய; புவியுள் தோன்றினர்-
மண்ணுலகத்தில் தோன்றிய (அரசு புரிந்த) அரச குலத்தினருள்; மூத்தவர்
இருக்கவே -உடன் பிறந்தவர்களுள் வயதால் முதிர்ந்தவர் இருக்க; நிலம்
முறைமையால் காத்தவர் - உலகத்தைமுறைப்படி (அரசு நடத்திக்)
காத்தவர்கள்; உளர் எனின் - இருப்பார்கள்ஆயின்; காட்டி-
அவர்களைச் சான்றாகக் காட்டி; காண்டிர்- உம் கருத்தையும் ஒப்புக்
காண்பீர்களாக.
காட்டிக் காண்டல் என்பது சான்றுரைத்து உறுதிசெய்தலாகும். ‘ஆல்’
அசை. 16
