அற்புதம் காண விரும்பும் மனிதரே

bookmark

அற்புதம் காண விரும்பும் மனிதரே
வாருங்கள் செபியுங்கள் புனிதர் பாதம் சேருங்கள் (2)

1. படுக்கையில் வீழ்ந்தவர் புதுமையாக எழுந்தனர் -2
கடலில் விழுந்து தவித்தவர் கரையை அடைந்து மகிழ்ந்தனர்
குருடரும் அருள்பெற்று ஒளியைக் கண்டனர் -2

2. பொருளினைத் தொலைத்தவர் கண்டு எடுக்க அருள் செய்தார் -2
கடின உள்ளம் கொண்டவர் கனிந்த இதயம் பெறச் செய்தார்
கயவரும் கடவுளைக் கண்டு துடித்தனர் - 2