அரசியற் படலம் - 172

bookmark

172.

ஈந்தே கடந்தான். இரப்போர் கடல்; எண் இல் நுண் நூல்
ஆய்ந்தே கடந்தான். அறிவு என்னும் அளக்கர்; வாளால்
காய்ந்தே கடந்தான். பகை வேலை; கருத்து முற்றத்
தேய்ந்தே கடந்தான். திருவின் தொடர் போக பௌவம்.
 
இரப்போர்கடல்     ஈந்தே கடந்தான் - அவ்வரசன்.  தன்னிடம்
யாசிப்பவர்கள்  என்னும்  கடலை  ‘ஈதல்’  என்றும்   தெப்பம்கொண்டு
கடந்தான்;அறிவு என்னும் அளக்கர் எண்ணில் நுண்நூல்  ஆய்ந்தே
கடந்தான் -  அறிவு என்ற கடலை. எண்ணற்ற நுண்ணிய  நூலாராய்ச்சி
என்ற படகு கொண்டு தாண்டினான்; பகைவேலை வாளால்  காய்ந்தே
கடந்தான்-  பகைவர்கள்  என்ற கடலை. வாள் முதலிய  படைத்துணை
கொண்டு. கோபம்காட்டி நீந்தினான்; திருவின்தொடர் போகபௌவம்-
செல்வ  வளத்தாலே  தொடர்ந்து  வரும்  இன்பம்  என்னும்  கடலை;
கருத்து முற்றத் தோய்ந்தே  கடந்தான்-  மனம்  நிறைவு  பெறும்படி
துய்த்தே கடந்தான்.

தயரதன்.     தன்னை நாடிவரும் யாசகர்களை முனியாது. கொடுத்து
அனுப்பும்  இயல்புடையவன்.  உயர்ந்த  நூல்களைக்   கற்றுத் தெளிந்த
அறிவுடையவன்.   எத்துணைப்   பகைவர்  திரண்டு   வரினும்  வாள்
கொண்டு.    கோபம்காட்டி.    வெல்லும்     வீறுடையவன்.    உலக
இன்பங்களை-  மனம்  நிறைவுறுமாறு.  துய்த்து  வாழ்ந்தவன்  என்பது
கருத்து.   அளக்கர்.  வேலை.  பௌவம்   என்பன.  கடல்   என்னும்
பொருள்   கொண்ட   ஒரு   பொருட்    பன்மொழி.   பகை:  சாதி
யொருமைப்பெயர்.    பகையரசை     உணர்த்தும்.    இரப்போர்கடல்.
அறிவென்னும்  அளக்கர்.  பகைவேலை.   போக   பௌவம்  என்பன
உருவகங்கள். போக பௌவம் இன்பக் கடல்  என்று பொருள்  கொண்ட
வடமொழித் தொடர்.                                         5