அம்புஜம்மாள்
அம்புஜத்தம்மாள் வசதியான குடும்பத்தில் 8 ஜனவரி 1899ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் எட்டாம் நாள் பிறந்தார். அன்னை கஸ்தூரிபாயின் எளிமையான தோற்றத்தினால் ஈர்க்கப்பட்டு, எளிமையாக வாழ்ந்தார். பட்டு, பகட்டு, ஆங்கிலமோகம் அனைத்தையும் துறந்தார். பல்வேறு கட்டுப்பாடுகள் மிகுந்த குடும்பத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டார்.
வை.மு.கோதைநாயகி அம்மாள், ருக்மணி லட்சுமிபதி முதலியவர்களோடு நட்புக்கொண்டு பெண்ணடிமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார். காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று செல்லமாக அம்புஜத்தம்மாள் அழைக்கப்பட்டார். தந்தையின் பெயரோடு, காந்தியடிகளின் பெயரையும் இணைத்துச் சீனிவாச காந்தி நிலையம் என்னும் தொண்டு நிறுவனத்தை அமைத்தார். அம்புஜத்தம்மாள் தம் எழுபதாண்டு நினைவாக, நான் கண்ட பாரதம் என்னும் அரிய நூலை எழுதியுள்ளார்.
