அமுக்கிராக்கிழங்கு

அமுக்கிராக்கிழங்கு

bookmark

தாவர இயல் பெயர்: Withaniya Somnifera

இதன் மறு பெயர்கள்: அசுவகந்தம், அசுவகந்தி, அமுக்குரவு, இருளிச் செவி, அசுவம்

வளரும் இடங்கள்: ஆசிய நாடுகள் அனைத்திலும் பெரும்பாலும் வளரும். உஷ்ண பிரதேசங்களில், வனங்களில் கூடக் காணக் கிடைக்கும்.

பயன் தரும் பகுதிகள்: இலை, வேர்க்கிழங்கு ஆகிய அனைத்துமே பயன் தரும்.

பொதுவான தகவல்கள் : கசப்புச் சுவையும், துணைச் சுவையாக துவர்ப்பும், உஷ்ண வீரியமும் கொண்டு இருக்கும். அத்துடன் இதில் உடலை வளர்க்கும் வேதியியல் பொருள்களும், புரதங்களும், அமினோ அமிலங்களும் நிறைந்து உள்ளது.

மருத்துவப் பயன்கள்:

* அமுக்கிராக் கிழங்கின் சாறு இருமல், இழுப்பு, வெண் குஷ்டம், க்ஷயம், நஞ்சு, இரணங்கள் ஆகிய அனைத்தையும் போக்க வல்லது.

* அமுக்கிராக் கிழங்கின் சாரத்தை தேன், நெய்யுடன் உட்கொள்ளச் செய்தால் இழுப்பு நோய் நீங்கும்.

* அமுக்கிராக் கிழங்கின் சாறு பாலுணர்வு, ஞாபக மறதி, தாய்ப்பால் சுரப்பு, நரம்புத் தளர்ச்சி, உடல் இளைப்பு ஆகிய அனைத்தையும் மேம்படுத்தும்.

* அமுக்கிராக் கிழங்கின் சாறு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து அவைகளின் பலவீனத்தைப் போக்கி மலட்டுத் தன்மையை நீக்குகிறது.

* நாள் பட்ட கல்லீரல் நோய்களை போக்க அமுக்கிராக் கிழங்கு பெரிதும் பயன்படுகிறது.

* அமுக்கிரா கிழங்கு பழமாகும் சூழலில் அல்லது கனிந்த நிலையில் உடல் நலம் தேறுவதற்கும் உடல் செயலியில் நிகழ்ச்சிகளைச் சரிப்படுத்தவும் உதவும்.

* அமுக்கிரா சூரணத்தை பாலில் கலந்து வீக்கம், படுக்கைப் புண் ஆகியவற்றிற்கு மேல் பூச்சாகப் பூச விரைவில் ஆறும்.

* அமுக்கிராக் கிழங்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

* அமுக்கிராக் கிழங்கை குழந்தைகளுக்குத் தொடர்ச்சியாகப் பல நாள்கள் கொடுப்பதால் அவர்களின் திட காத்திரமான வளர்ச்சிக்கு வெகுவாகப் பயன்படுகிறது.

* அறிவியல் ஆய்வுகளின் மூலம் அமுக்கிராங்கிழங்கு பக்க விளைவுகள் இல்லாத மிகவும் பயன்தரக் கூடிய ஒரு மூலிகை மருந்தாகும். அமுக்கிராங்கிழங்கு சப்த தாதுக்களில் தளர்ச்சி ஏற்படல், நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும்.

* அமுக்கிராக் கிழங்கின் கஷாயத்தை இளஞ் சூட்டில் நெய்ப்பக்குவம் செய்து மாதவிடாய்க் காலத்தில் உட்கொள்ளச் செய்தால், மலடு நீங்கிப் பிள்ளைப் பேறு உண்டாகும்.

* அமுக்கிராக் கிழங்கின் துகளைப் பசுவின் சிறு நீருடன் அரைத்துப் பயன்படுத்தினால், மிகவும் முற்றிய பெருவயிறு, கிருமி நோய், வீக்கம் ஆகிய அனைத்தையும் அது நீக்கும்.

* அமுக்கிராக் கிழங்கு நாள் பட்ட கல்லீரல் நோய்களை போக்கப் பயன்படுகிறது.

* அமுக்கிராக் கிழங்கு குடல் தொடர்பான நோய்களுக்கு மருந்தாக அமைகிறது.