அன்பின் அமுதமே அருளின் அருவியே

bookmark

இயேசு தெய்வமே இதயம் வாருமே
உலகின் ஒளியே வா உள்ளக் குடிலில் வா
வார்த்தை உருவில் வா வாழ்வின் நிறைவே வா

1. அன்பெனும் தீபம் ஏந்தி அருளெனும் ஒளியை ஏற்றி -2
அவனியில் உதித்த மன்னவா உன் அன்பினை நான் பாடவா
உன்னைத் தேடும் இதயக் கோயில் அருளால் நிறைந்திட வா -2

2. விண்ணோர் போற்றும் ஒளியே
மண்ணோர் வாழ்த்தும் நிலவே (2)
உலகெலாம் இன்பக் கோலம் எம் உள்ளங்கள் நீதேடும் காலம்
உன்னைப் பாடும் நேரம் உயிரின் உயிராய் இணைந்திட வா -2