அசுவமேத யாகம்

bookmark

சீதையின் உருவ பொம்மையைத் தனருகில் வைத்துக் கொண்டு, இராமர் அசுவமேத யாகம் செய்வதும், பல நாடுகளை சுற்றி வர அனுப்பப்பட்ட வேள்விக் குதிரையை, இலவ-குசர்கள் கட்டி வைத்தலும், வேள்விக் குதிரைகளை மீட்க வந்த சத்துருக்கனன், பரதன், இலக்குமணன் முதலானோர்களை இலவ-குசர்கள் போரில் வெல்வதும், இறுதியில் இராமரே நேரில் வந்து, இலவ-குசர்களை சந்தித்து வேள்விக் குதிரையுடன், லவ-குசர்களையும் அயோத்திக்கு அழைத்துச் செல்வதும், சீதை பிளவுண்ட பூமியில் இறங்கி இறத்தலும், இராமர் ஆயிரம் ஆண்டுகள் அயோத்தியை ஆண்ட பின்னர், இராமன் தனது நாட்டின் பகுதிகளை இலவ- குசர்களுக்குப் பிரித்துக் கொடுத்தல் போன்ற விவரங்கள் உத்தர காண்டத்தில் உள்ளது. இராமர் வைகுந்தம் செல்லும் நேரம் நெருங்கி விட்டதை அறிந்து, தனது உடன்பிறப்புகளுடன் பூவுலகை விட்டு வைகுந்தம் ஏகும் வரை உத்தர காண்டத்தில் கூறப்படுகிறது.