அகலிகைப் படலம் - 536

bookmark

பகீரதன் அயோத்திக்கு மீளுதல்

536.    

‘நிரையம் உற்று உழல் சகரர்கள்
   நெடுங் கதி செல்ல.
விரை மலர் பொழிந்து ஆர்த்தன.
   விண்ணவர் குழாங்கள்;
முரைசம் முற்றிய பல்லியம்
   முறை முறை முழங்க.
அரைசன் அப்பொழுது. அணி மதில்
   அயோத்தி மீண்டு அடைந்தான்.
 
முறை முறை - அடுக்கு மிகுதிப் பொருள் பற்றியது.

நரகத்திற்     புகுந்த சகரர் நற்கதி  உற்றனர்;விண்ணவர் மகிழ்ந்து
மலர்  சொரிந்தனர்;  பல்லியங்கள்  ஆர்த்தன;  பகீரதனும்  அயோத்தி
அடைந்தான் என்பது.                                      5-27