அகலிகைப் படலம் - 528
கங்கை கூறுதல்
528.
‘ஒரு மடக் கொடி ஆகி வந்து.
“உனது மா தவம் என்?
பொரு புனல் கொடி வரின். அவள்
வேகம் ஆர் பொறுப்பார்?
அரன் உரைத்த சொல் வினோதம்;
மற்று இன்றும் நீ அறிந்து.
பெருகு நல் தவம் புரிக!” என.
வர நதி பெயர்ந்தாள்.
அரன் - ஊழிக் காலத்தில் எல்லா உயிர்களையும் அழிப்பவன்;
எப்பொழுதும் தன்னைச் சரண் புகுந்தவர்களின் துயரை அழிப்பவன்;
வரநதி - சிறந்த நதியான கங்கா தேவி.
பகீரதனது வழிபாட்டை ஏற்றுக் கொண்ட கங்காதேவி இந்தக்
கங்கை மண்ணுலகம் வந்தால் அதன் வேகத்தைச் சிவனால் தாங்க
முடியுமா என்பதை அறியுமாறு கேட்டாள் என்பது. 5-19
