அகலிகைப் படலம் - 527

bookmark

பகீரதன் சிவபிரானையும் கங்கையையும்
குறித்து நோற்றல்

527.    

‘மங்கை பாகனை நோக்கி. முன்
   மொழிந்தன வருடம்
தங்கு மா தவம் புரிதலும்.
   தழல் நிறக் கடவுள்
அங்கு வந்து.”நின் கருத்தினை
   முடித்தும்” என்று அகன்றான்;
கங்கையைத் தொழ. காலம்
   ஐயாயிரம் கழித்தான்.
 
மங்கை பாகன் - சிவன்; தழல் நிறக் கடவுள் - சிவன்.

பகீரதன்  சிவன்  அருளை வேண்டிப் பதினாயிரம் ஆண்டுகள் தவம்
செய்தான்;   சிவனும்  அரசனின்   கருத்துக்கு   இசைந்தான்; பின்னர்க்
கங்கையை   நோக்கி  ஐயாயிரம்  ஆண்டுகள் தவம் கிடந்தான் பகீரதன்
என்பது.                                                 5-18