அகலிகைப் படலம் - 524
பகீரதன் தவம்புரியப் பிரமதேவன் தோன்றுதல்
524.
‘ஞாலம் யாவையும் சுமந்திரன் தன்வயின் நல்கி.
கோலும் மா தவத்து இமகிரி மருங்கினில் குறுகி.
காலம் ஓர் பதினாயிரம் அருந் தவம் கழிப்ப.
மூல நான்மறைக் கிழவனும் வந்து. இவை மொழிவான்:
சுமந்திரன் - நல்ல ஆலோசனையுடையவன் என்பது பொருள்.
வசிட்டனது மொழிப்படி இமயமலைச் சாரலில் பதினாயிரம் ஆண்டு
பகீரதன் கடும் தவம் செய்தான்; அத் தவத்திற்கு மகிழ்ந்த பிரமனும்
அம் மன்னன்முன் தோன்றினான் என்பது. 5-15
