அகலிகைப் படலம் - 519

bookmark

சகரன் வேள்வி முற்றிப் பரலோகம் செல்லல்

519.    

‘பழுதிலாதவன் உரைத்த கொல்
   கேட்டலும். பரிவால்
தொழுது. வாம் பரி கொணர்ந்து. அவி
   சுரர்களுக்கு ஈயா.
முழுதும் வேள்வியை முற்றுவித்து.
   அரசனும் முடிந்தான்-
எழுது கீர்த்தியாய்! - மைந்தனுக்கு
   அரசியல் ஈந்து. 
 
பழுது- காமம்.  வெகுளி.  மயக்கம்  என்பன;  எழுது  கீர்த்தி -
எழுதப்படுகின்ற புகழ்.

அம்சுமான்   கொண்டுவந்த குதிரையை வைத்துச் சகரன் வேள்வியை
முடித்தான்.    தேவர்களுக்கு     அவிசு     தந்தான்.    பெயரனான
அம்சுமானுக்கு முடிசூட்டி இறந்தான் என்பது.                   5-10