அகலிகைப் படலம் - 518

bookmark

கபிலமுனிவரிடத்தினின்று வேள்விக்
குதிரை பெறுதல்

518.    

‘விண்டு நீங்கினர் உடல் உகு
   பிறங்கல் வெண் நீறு
கண்டு. துண்ணெனும் மனத்தினன்.
   கபில மா முனிதன்
புண்டரீக மென் தாள் தொழுது
   எழுந்தனன் புகழ.
“கொண்டு போக. நின் இவுளி!” என்று
   உற்றதும் குறித்தான்.
 
அம்சுமான்    இறந்துவிட்ட தன் தந்தையரின் சாம்பல் மலைபோலக்
குவிந்து    கிடப்பதைப்  பார்த்துத்  திடுக்கிட்டான்.  கபில  முனிவனை
வணங்கிக்   குதிரையைக்   கொண்டுபோகக்கேட்டான். கபிலனும் உடன்
பட்டான் என்பது.                                          5-9