அகலிகைப் படலம் - 515
சகரர் பாதலஞ்சென்று கபிலமுனிவர் பின்புறம்
குதிரையைக்கண்டு அம்முனிவரை வருத்துதல்
515.
‘நூறு யோசனை அகலமும் ஆழமும் நுடங்கக்
கூறு செய்தனர். என்பரால். வட குணதிசையின்;
ஏறு மா தவக் கபிலன்பின் இவுளி கண்டு. எரியின்
சீறி. வைதனர்; செருக்கினர். நெருக்கினர்; செறுத்தார்.
யோசனை - பேரளவு - சமணநூல் வழக்கு; குணக்கு - கிழக்கு.
சகர குமாரர் வடகிழக்குத் திசையிலே நூறு யோசனை அகலமும்
ஆழமும் அமையத் தோண்டினர்;கபிலன் பின் இருந்த குதிரையைப்
பார்த்தனர்; கோபத்தால் அம் முனிவனை ஏசினர் என்பது. 5-6
